Tuesday, July 22, 2008

உடல் ஆரோக்கியம்



இன்றைய உலகில் மனிதன் நோயின்றி வாறவே விரும்புகிறான், ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் நோயற்ற வாவை நாம் பெறமுடியும். உணவே மருந்து என்பது நாம் அறிந்ததே. நாம் அன்றாடம் உணவில் சேர்’கும் சமையல் பொருட்களே நம’கு மருந்து என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.வெந்தயக் கீரை வெந்தயக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைப்பார்கள். இதை தினசரி சமைத்து சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும். வயிற்று உப்பிசத்தை அடக்கி விடும். வாத சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். ஆனால் பசியை மட்டும் படுத்திவிடும். இரும்புச் சத்து மிகுந்தது. வெந்தயம் பதார்த்தங்களை தாளிக்கும் பொழுது வெந்தயத்தை எண்ணெயில் போட்டு சிவக்க வைத்துத் தாளிப்பார்கள். இது பதார்த்தத்திற்கு நல்ல மணத்தைத் தரும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமநிலையில் வைக்கும். ரத்த பிரமேகம் என்ற நோயைக் குணப்படுத்தும். காச நோயைக் குணப்படுத்தும். சீத பேதியைக்கூட நிறுத்தும், தாதுவை விருத்தி செய்யும். பாகற்காய் பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும். மலத்தை இளக்கி வெளியேற்றும். நோய்க் கிருமிகளை அழிக்கும். இரத்தத்திரலுள்ள சர்க்கரையைக் குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தோம் என்றால் பிரச்சினை இல்லை, இல்லையென்றால் பெரும்தொல்லைதான். நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்? ஆவரம்பூ கிடைக்குமா அங்கு? அதை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம், பாகற்காய் அவித்து அந்த தண்ணீரைக் குடிக்கலாம். மேலும் டயட் மற்றும் உடல்பயிற்சி ரொம்ப முக்கியம். அதை சரியாக ஃபோலோ செய்தால் இன்சுலின்கு அவசியமே இல்லை. அதிகமாக கீரை, சப்பாத்தி,ராகி சேர்த்துக் கொள்ள செய்யுங்கள், மேலும் நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும்.நட்புடன் ஜீவாகிருஷ்ணன்ஆரோக்கியம் தரும் 'ஆயில்பாத்' விஷீஸீபீணீஹ், 17 ஞிமீநீமீனீதீமீக்ஷீ 2007 முன்பெல்லாம் நம் நாட்டில் வாரத்திற்கு இருமுறை எண்ணைய் தேய்துக் குளிப்பது வழக்கமாக இருந்தது. அறிவியல் வளர்ச்சியா, நாகரீக மோகமோ தெரியவில்லை, அப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. எண்ணைய் குளியலிலும் சித்த மருத்துவ் ம் இருக்கிறது. நீங்கள் எண்ணைய் தேய்ப்பதற்கு முன்பு அந்த எண்ணையுடன் அதாவது நல்லெண்ணையுடன் சிறிது சீரகம், மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்து அதனைத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலனைத் தரும். குறிப்பாக கண் எரிச்சல், உடல் வலி, நரம்புத் தளர்ச்சி, போன்ற நோயகள் அகலும். உடலுறுப்புக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். என்ன! இனி யாரும் எண்ணைய் குளியலைத் தவிர்க்க மாட்டீர்கள் தானே!